Home » »
பொதுமக்களால் அமைக்கப்பட்டுவரும்
வடமராட்சிக் கிழக்கு
கொடுக்குளாய் - இயக்கச்சி இணைப்பு வீதி



மாறிமாறி வரும் அரசாங்கங்கள் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பதாக கூறிவருகின்றன. ஆனால், கிராமப்புறங்கள் இன்றும் கவனிக்கப்படாமலேயே காணப்படுகின்றன. அந்தவகையில், யாழ். மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்கிலுள்ள கொடுக்குளாய் கிராமமும் ஒன்று.

கடலும் கடல் சார்ந்த இடமுமாகக் காணப்படும் இந்தக் கிராமம் இயற்கை அழகு நிறைந்தது. மணற்பரப்பைக் கொண்ட அழகிய கடற்கரை சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் விதமாகக் காணப்படுகின்றது.

மீன் பிடியை பிரதானமாகக் கொண்ட இப்பிரதேச மக்கள் தமது கிராம அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகின்றனர். கிராமத்தின் பல்வேறு அபிவிருத்திகளை தாமாகவே மேற்கொண்டு வருகின்றனர். எந்தவொரு அரசியல் வாதிகளையும் இவர்கள் எதிர்பார்ப்பதில்லை. யுத்தம், சுனாமி என மாறி மாறி பாதிப்புக்களுக்குள்ளாகியுள்ளனர். ஆனால், மீண்டும் தமது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு தற்பொழுது தலைநிமிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்தான், இவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது, இந்தக் கிராம மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி உள்ளிட்ட 9 வீதியிலுள்ள பிரதேசங்களுக்கு செல்வதாயின் பல கிலோமீற்றர் தூரம் சுற்றிச் செல்லவேண்டியுள்ளது. அதாவது, 25 கிலோமீற்றர் தூரம் சுற்றிச் செல்லவேண்டியுள்ளது. இந்த கொடுக்குளாய் - இயக்கச்சி இணைப்பு வீதி திறக்கப்பட்டால் 10 கீலோமீற்றர் தூரம் மாத்திரமே செல்லவேண்டியுள்ளது.

இந்த வீதி அமைப்பதற்கான முயற்சிகள் 1974 ஆம் ஆண்டிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், அரசியல் வாதிகளும், சம்ந்தப்பட்ட உத்தியோகத்தர்களும் இந்த விடயத்தில் பாராமகமாகவே இருந்த வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களை நம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்த மக்கள் தற்போது தாமாகவே இந்த வீதி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்தப் பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்கள் இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இவர்களின் உதவியுடன் பிரதேச மக்களும் தம்மாலியன்ற நிதியுதவியை வழங்கியதுடன், வீதி அமைக்கம் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 20 உளவு இயந்திரங்களும், இரண்டு பெக்கோ இயந்திரங்களும் வீதி அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.


ரசாங்கத்தையோ, அரசியல் வாதிகளையோ நம்பாமல் கொடுக்குளாய் பிரதேச மக்கள் தமது சொந்தப் பணத்தாலும் சுய முயற்சியாலும் இந்த வீதி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்த பணியை துரிதப்படுத்த வேண்டுமாயின், மேலும் உதவிகள் தமக்குத் தேவைப்படுவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான உதவிகளை வழங்க சமூக ஆர்வலர்களும், மக்கள் நலன்விரும்பிகளும் முன்வருவார்களேயானால், இந்தப் பிரதேசம் அபிவிருத்தியில் உச்ச நிலையை அடையும் என்பதில் ஐயம் இல்லை.
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger