Home » » நட்புக்கு எல்லை உண்டு

நட்புக்கு எல்லை உண்டு



நட்பு என்பது மனித வாழ்வில் முக்கிய ர் இடத்தைப் பெறுகின்றது. தாய், தந்தை, சகோதரர் இல்லாத ஒருவன் கூட இருக் கலாம். ஆனால், நண்பனோ அல்லது நண்பியோ இல்லாத ஒருவன் இவ் உலகில் இருக்கமாட்டான். அந்த அளவுக்கு நட்பு என்பது ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.நட்பு பல நன்மைகளைப் பயக்கின்றது. நாம் சோர்ந்து போகும் வேளையில் தோழ் தந்து உற்சாகப்படுத்தியும், நாம் வெற்றி பெறும் வேளையில் நம்மை விட சந்தோசப்பட்டும். வாழ்க்கையை தொலைத்துத் தவிக்கும் வேளையில் புது வழியைக்காட்டியும். தம்மோடு உண்மையாக நடந்துகொள்ளும் நண்பனோ அல்லது நண்பியோ உள்ள ஒரு வன் உணர்ந்திருப்பான். தாய், தந்தையிடம் சொல்லத்தயங்கும் விட யத்தைக்கூட நண்பனிடம் பகிர்ந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு நட்பு வெளிப்படையானது. கள்ளகபடமற்றது. ஒருவனைப் பற்றி அறிய வேண்டு மாயின் அவனது நண்பனைப் பற்றி அறியுங்கள்" என்று பெரியவர்கள் கூறி யிருக்கிறார்கள். இத்தகைய சிறப்பை தன்னகத்தே கொண்ட நட்பை நாம் தெரிவு செய்யும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சிலர் யாராவது ஒரு நாள் பேசினால் உடனேயே அவரை நண்பன் என்று ஏற்று அவரிடம் தமது சொந்த விடயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். இது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்திவிடும். பொதுவாக நாம் குறிப்பிட்ட வயதில் எம் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதைப் போல் எமது நண்பர்க ளையும் தெரிவுசெய்வது எம் உரிமை யாகும். எமது வாழ்க்கைத் துணையைத் தெரிவுசெய்வதில் நம் பெற்றோர்களின் உதவி கிடைக்கும் ஆனால், நண்பர்களைத் தெரிவு செய்வது நம் கையில்தான் உள்ளது. ஆகையால் அதில் கவனத்துடன் நாம் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் எமது வாழ்வு வெற்றிபெறும்.இன்றைய காலத்தில் நட்பு என்பது ஓர் ஆபத்தான நிலையை அடைந்துள் ளது. ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ பழகும்போது அவர்கள் தம் தாய், தந்தையரை கூட மறந்து போகும் நிலையை அடைகிறார்கள். நட்பு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கை யிலும் முக்கியமான ஒன்றுதான். ஆனால், அதுவே வாழ்க்கையாகிவிடக் கூடாது.‘என் நண்பன் இல்லாவிடில் என்னால் வாழ முடியாது. என் நண்பி இல்லா விட்டால் என்னால எதுவுமே செய்ய முடியாதுஎனும் நிலைக்கு சிலர் ஆளாகிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. இன்னும் சிலர்என் நண்பன் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். என்னுடன் மட்டும் தான் பேசவேண்டும்என்னும் மன நிலைக்கும் உள்ளாகிவிடுகின்றார்கள். சிலர் தனது நண்பனோ அல்லது நண்பியோ காதல், திரு மணம் போன்ற வற்றில் ஈடுபடு வதைக்கூட விரும்புவ தில்லை. இது அவர்கள் கொண் டுள்ள ஒரு வகை மனநிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.அண்மையின் இரண்டு பெண்கள் ஓர் வைத்தியரிடம் சென்று நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறோம். எம்மால் பிரிந்து வாழமுடியவில்லை. எனவே, எம்மில் ஒருவர் ஆணாக மாற சிகிச்சை செய்ய வேண்டும்" என்று கூறிய சந்தர்ப்பங் களும் உண்டு. இதுவும் நட்பால்தான் இதில் நாம் ஆறுதல் படக்கூடியது என்னவெனில், இச் சம்பவம் நடந்தது எமது நாட்டில் அல்ல. பெரும்பாலும் இவ்வாறான சம்பவங்கள் வெளிநாடு களிலேயே நடக்கின்றன. இதற்கு பெற்றோரும் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும். ஏனெனில், அவர்களின் பாசமும் அன்பும் முழுமையாக இணைந்திருந்தால் இவர்கள் இப்படி நடந்திருக்கமாட்டார்கள். நமது அயல்நாடான இந்தியாவிலும் இப்படியான சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றமை இங்கு குறிப் பிடத்தக்கது. இது மட்டுமன்றி சில நண்பர்கள் தம்மிடையே ஓரினச் சேர்க் கையில் ஈடுபடுவதையும் எம்மால் அறிய முடிகின்றது. இப்படியான நட்பு என்பது வரம்பு மீறிச் செல்வதால் நிகழ்கின்றது. இதை சில நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்பது வேறுகதை. ‘நீ இல்லாமல் என்னாலும்நான் இல்லாமல் உன்னாலும் வாழ முடியாதுஎன்னும் மனநிலை நண்பர் மத்தியில் குடிகொள் வதனாலேயே ஓரினச் சேர்க்கை என்னும் விபரீதம் ஏற்படுகின்றது.சில விடயங்கள் சொல்லச் சங்கம மாக இருந்தாலும் சொல்லியே ஆக வேண்டும் என்பது தவிர்க்க முடியாது. அந்த வகையில் எம் நாட்டிலும் சிலர் நண்பர்கள் என்னும் வரம்பை மீறி இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவது மறைக்கமுடியாத உண்மையாகும்.நட்பா, காதலா என்றால், யாருமே நட்புதான் உயர்ந்தது என்று சொல்வார் கள். ஏன் எனில், அந்த அளவிற்கு நட்பு என்பது புனிதமானது. அதில் அன்பு இருக்கும், பரிவு இருக்கும், அக்கறை இருக்கும், உரிமை இருக்கும், ஏன் தாய்மைகூட இருக்கும். இத்தகைய புனிதம் வாய்ந்த நட்பை அதன் தன்மையையும் மேன்மையையும் கெடாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடைமையாகும்.முன்பெல்லாம் நட்பு என்றால் அதற்குள் காதல் என்பது தான் வந்து களங்கத்தை ஏற்படுத்தும் அதாவது சிலர் நட்பு என்று கூறிக்கொண்டு காதலில் ஈடுபடுவதால் யாருமே ஆண் பெண் நட்பை நம்புவதில்லை. சில சந்தர்ப்பங்களில் ஆண்- பெண் நட்பு காதலாக மாறுவதும் உண்டு. இதுகூட பரவாயில்லை. ஆனால், இப்போது இரு ஆண்கள் அல்லது இரு பெண்கள் கூட நட்பு வைத்துக்கொள்ள முடியாத நிலைக்கு சிலர் நட்பை நாசப்படுத்தி யுள்ளமை கவலைக்குரிய ஒன்றாகும். இரண்டு பெண்கள் அல்லது இரு ஆண்கள் நெருங்கிப்பழகினால் தப்பாகப் பேசுபவர்களும் உள்ளார்கள். இது அவர்களின் தவறில்லை. சிலர் நட்பு என்று கூறிக்கொண்டு எல்லைமீறி நடந்துகொள்வதுதான் அதற்குக் காரணம். எனவே, நட்பு என்பது எப்போதும் ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். அது வரம்பை மீறக்கூடாது. *
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger