அரசியல் சண்டித்தனம்

அண்மையில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிவைத்த சம்பவம் அரச ஊழியர்கள் மத்தியில் ஓர் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இவ்வாறு நடந்துகொண்டது நாட்டிலுள்ள அரச ஊழி யர்கள் அனைவரையும் அவமானப்படுத்தும் செயலாகும் எனக் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அரசியல்வாதி என்றால் எதுவாக இருந்தாலும் செய்ய முடியுமா? ஒருவரது சுயகௌர வத்தைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளலாமா?இலங்கையில் அரசியல் என்பது சண்டி யர்களின் இருப்பிடமாக மாறிவிட்டது. அதை நிரூபிக்கும் வித மாகவே அண்மையில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா நடந்து கொண்டுள்ளார்.மேர்வின் சில்வா என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது அடாவடிகள்தான். இதற்கு முன்னர் அவரது இலக்குக்கு உள்ளாகியவர்கள் ஊடகவியலாளர்கள்தான். ஆனால் இப்போது அரச ஊழியர்களும் அவரின் அடாவடிக்கு உட்பட்டு நிற்கின்றனர்.நாட்டில் நீதிமன்றங்கள் இருக்கும் போது நாட்டின் அமைச்சர் நீதித்துறை அதிகாரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது. இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயலாகும். குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு வரவில்லை என்ற காரணத்தினாலேயே அவர் இவ்வாறு தண்டிக்கப்பட்டார். தன் குழந்தை சுக யீனமுற்றிருந் ததால்தான் வரவில்லை என்று அவர் தெரிவித்தும் கூட அமைச்சர் கடும் போக்கோடு நடந்து கொண்டுள்ளார்.ஆனால் இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தில் எழுப்பியபோது குறித்த ஊழியரைத் தான் மரத் தில் கட்டவில்லை என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.உண்மையில் அவர் என்ன செய்தார் என்பதை சம்பவம் நடந்த அன்றே தொலைக் காட்சிகள் தெட்டத் தெளிவாகக் காட்டி இருந்தன. (ஊடகவி யலாளர்கள் அமைச்ச ராலேயே அழைத்துச் செல்லப்பட்டருந்தனர்) அமைச்சர் நாடாளுமன்றில் கூறியது போன்று குறித்த சமுர்த்தி ஊழியர் தானாக முன்வந்து தன்னை மரத்தில் கட்டிக் கொள்ளவில்லை என்பதை முழு மக்களுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இருப்பினும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் முழுப்பூசனிக் காயை சோற்றில் மறைத்தார். ஏனெனில் மக்களை அவர் முட் டாள்கள் என்று நினைத்தார். தான் சொல்வது எல்லாவற்றை யும் மக்கள் நம்புவார்கள் என்று அவர் கருதுகின்றார். தான் மக் களிடம் அக்கறை கொண்டிருக்கிறார் என்றும் அவர்களுக்காக எது வாக இருந்தாலும் செய்வேன் என்றும் எல்லோருக்கும் எடுத் துக்காட்டவே அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

வடக்கில் சிங்களக் குடியேற்றம் அரசின் அடுத்த திட்டம்

யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற ஒன்றே இனி இருக்காது." இது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க அண்மையில் தெரிவித்த கருத்து. இதைக் கேட்டு சந்தோசப்படும் மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. ஏனெனில், இவர் இவ்வாறு கூறியதில் ஏதோ ஓர் உள் நோக்கம் இருக்கும் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். பல வருடங்களாக யாழ்ப்பாணத்தின் பல பகுதியை உயர்பாதுகாப்பு வலயம் என்ற முதலை விழுங்கிவைத்துள்ளது. இதை விடுவிக்க தமிழ் அரசியல்வாதிகள் முயற்சி எடுத்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. பல காரணங்களைக் காட்டி இராணு வத்தினர் அந்த இடங்களுக்கு மக்களை அனுமதிக்க மறுப்புத் தெரிவித்தனர். ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டடங்கள் உட்படப் பல முக்கிய இடங் களை இந்த உயர் பாதுகாப்பு வலயம் விழுங்கி வைத்திருக்கிறது.தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே அக திகளாக்கப்பட இதுவும் காரணமாக அமைந்தது. 500 மீற்றர் தூரத்தில் தங் கள் வீடு இருந்தாலும் கூட அங்கு செல்ல முடியாத நிலைமையில் தமிழ் மக்கள் அந்தரித்து வருகிறார்கள். சில இடங்க ளில் மக்கள் தமது சொந்த வீடுகளைச் சென்று பார்த்து விட்டு வரக்கூட அனு மதிக்கப்பட வில்லை. அண்மையில் ஐக் கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவகலா மகேஸ்வரன் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள கோயில்களை தரிசிக்க மக்களுக்கு அரசு அனுமதி வழங்கவேண்டும்" - என்று கோரிக்கை விடுத்திருந்தார். நிலைமை அந்தளவுக்கு மோசமாக உள்ளது.உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்க ளைக் குடியமர்த்த முடியாது என்று அரசு தொடர்ந்தும் கூறிவந்தது. அதை வலுப் படுத்தும் விதமாக அண்மையில் அரசின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவித் திருந்தார். நாட்டின் பாதுகாப்புத் தான் முக்கியம். அதற்கு அடுத்த படியானது தான் ஏனைய விடயங்கள். எனவே வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படமாட்டாது" - என ஆணித்தரமாகக் கூறியிருந்தார். இது இவ்வாறிருக்கும்போது யாழ். கட்ட ளைத் தளபதி மேற்கண்டவாறு கூறியிருந்தமை தமிழ் மக்கள் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.அரசு வடக்கில் 10,000 ஏக்கர் காணியை சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்வதற்காக சுவீகரித்துள்ளது" - என கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் பகிரங்கமாகக் கூறியிருந்தார். இதுவும் யாழ். மாவட்ட படைத் தளபதியின் கூற்றுப் பொருத்திப் பார்க்கப்பட வேண்டி யவைகளாகும். அரசு உயர் பாதுகாப்பு வலயம் என்ற பேரில் வடக்கில் பல இடங்களை தன்னகத்தே முடக்கிவைத்துள்ளது. அங்கு மக்களை நெருங்கவே விடுவதில்லை. அதுவும் வன் னிப் பிரதேசத்தில் தான் அது உச்ச நிலையை அடைந்துள்ளது. 30 வருடகால யுத்தத்தின் வடுக்களை முற்றுமுழுதாகத் தாங்கியுள்ள வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் இன்று உயர்பாதுகாப்பு வலயம் என்ற கவசப்போர்வைகளைத் தான் காண முடிகிறது. கிளிநொச்சி, ஸ்கந்தபுரம், மயில்வாகனபுரம், திருபையாறு, திருமுருகண்டி, கேப்பாப் புலவு போன்ற இடங்களுக்கு மகக்ள் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. மயில்வாகனபுரக் கிராம மக்கள் பிரமந்தனாறு குளத்திற்கு அண்மையில் உள்ள சதுப்பு நிலத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்க ளது சொந்த இடம் அங்கிருந்து 500 மீற்றர் தொலைவில்தான் இருக்கிறது. இருந்தும் அங்கு அவர்களால் செல்ல முடியவில்லை.இந்த இடங்கள் எல்லாம் சிங்களக் குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்படப் போகின்றன என்ற அச்சம் தொடர்ந்து மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ளது.இவ்வாறான இடங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் இருப்ப தற்கான காரணத்தை அரசிடம் தமிழ்க் கூட்டமைப்பு வினவியபோது இங்கு வீடுகளை அமைப்பதற்கு கூரைத்தகடுகள் போதுமான அளவு இல்லை"- என அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஆனால் வடக்கில் நிரந்த படைமுகாம் அமைக்கப்பட்டு படையினரின் குடும்பத்தினரும் அவர்ளுடன் வாழ வழி செய்யப்படும் என இராணுவத்தளபதி மகாநாயக்கர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.அண்மையில் கிளிநொச்சியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்த ஜனாதிபதியிடம் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பல மனுக்களை கைளித்திருந்தனர். ஆனாலும் சொந்த இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு தொடர்ந்தும் அனுமதி மறுக்கிறது இராணுவம்.அத்துடன், தீடீரென யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி அளிவித்துள்ளார். ஒரு புறத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்பதை அகற்றுவதாக் கூறிக் கொண்டு மற்றொரு புறத்தில் மக்களின் காணிகள் பெருமெடுப்பில் கையகப்ப டுத்தப்படுகிறது.யாழ்ப்பாணம் மக்கள் செறிந்து வாழும் பகுதி. இங்கு பெருமெடுப்பிலான சிங்களக் குடியேற்றத்துக்குரிய அரச காணிகளையோ தனியார் காணிகளை சுவீகரிப்பதோ இலகுவானதல்ல. எனவே தான் அங்கிருந்து படையினரின் உயர்பாதுகாப்பு வலயங்க ளை அகற்ற இப்போது அரசு முன்வருகிறது.பதிலாக வன்னியில் பெருமளவு காணிகளை சிங்களக் குடியேற்றங்களுக்காக சுவீகரிப்பது அரசுக்கு இலகுவானது.யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களில் உள்ள இராணுவத்தினர் வன்னிப் பகுதிக்கு நகர்த்தப்பட்டு பெருமெடுப்பில் நிலைநிறுத்தப்படுவர்.அதேபோன்று வன்னியில் சிங்களக் குடி யேற்றங்களை நிறுவுவதன் மூலம் வடக் கில் தமிழ் மக்களின் தொடரான பரம்பலைத் துண்டிப்பதும் அரசின் நோக்கங்களில் ஒன்று.இதன் மூலம் அரசு யாழ்ப்பாணத்தையும் வன்னியையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த முடியும்.திருகோணமலையில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை சிறுபான்மையினர் ஆக்கி தங்களுடைய அதிகாரத்தை திணிக்க முயற்சித்தமையைப்போன்று, வடக்கிலும் ஒரு நாசகார நடவடிக்கையை மேற்கொள்ள அரசு திட்டம் தீட்டியுள்ளது.

நட்புக்கு எல்லை உண்டு



நட்பு என்பது மனித வாழ்வில் முக்கிய ர் இடத்தைப் பெறுகின்றது. தாய், தந்தை, சகோதரர் இல்லாத ஒருவன் கூட இருக் கலாம். ஆனால், நண்பனோ அல்லது நண்பியோ இல்லாத ஒருவன் இவ் உலகில் இருக்கமாட்டான். அந்த அளவுக்கு நட்பு என்பது ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.நட்பு பல நன்மைகளைப் பயக்கின்றது. நாம் சோர்ந்து போகும் வேளையில் தோழ் தந்து உற்சாகப்படுத்தியும், நாம் வெற்றி பெறும் வேளையில் நம்மை விட சந்தோசப்பட்டும். வாழ்க்கையை தொலைத்துத் தவிக்கும் வேளையில் புது வழியைக்காட்டியும். தம்மோடு உண்மையாக நடந்துகொள்ளும் நண்பனோ அல்லது நண்பியோ உள்ள ஒரு வன் உணர்ந்திருப்பான். தாய், தந்தையிடம் சொல்லத்தயங்கும் விட யத்தைக்கூட நண்பனிடம் பகிர்ந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு நட்பு வெளிப்படையானது. கள்ளகபடமற்றது. ஒருவனைப் பற்றி அறிய வேண்டு மாயின் அவனது நண்பனைப் பற்றி அறியுங்கள்" என்று பெரியவர்கள் கூறி யிருக்கிறார்கள். இத்தகைய சிறப்பை தன்னகத்தே கொண்ட நட்பை நாம் தெரிவு செய்யும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சிலர் யாராவது ஒரு நாள் பேசினால் உடனேயே அவரை நண்பன் என்று ஏற்று அவரிடம் தமது சொந்த விடயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். இது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்திவிடும். பொதுவாக நாம் குறிப்பிட்ட வயதில் எம் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதைப் போல் எமது நண்பர்க ளையும் தெரிவுசெய்வது எம் உரிமை யாகும். எமது வாழ்க்கைத் துணையைத் தெரிவுசெய்வதில் நம் பெற்றோர்களின் உதவி கிடைக்கும் ஆனால், நண்பர்களைத் தெரிவு செய்வது நம் கையில்தான் உள்ளது. ஆகையால் அதில் கவனத்துடன் நாம் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் எமது வாழ்வு வெற்றிபெறும்.இன்றைய காலத்தில் நட்பு என்பது ஓர் ஆபத்தான நிலையை அடைந்துள் ளது. ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ பழகும்போது அவர்கள் தம் தாய், தந்தையரை கூட மறந்து போகும் நிலையை அடைகிறார்கள். நட்பு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கை யிலும் முக்கியமான ஒன்றுதான். ஆனால், அதுவே வாழ்க்கையாகிவிடக் கூடாது.‘என் நண்பன் இல்லாவிடில் என்னால் வாழ முடியாது. என் நண்பி இல்லா விட்டால் என்னால எதுவுமே செய்ய முடியாதுஎனும் நிலைக்கு சிலர் ஆளாகிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. இன்னும் சிலர்என் நண்பன் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். என்னுடன் மட்டும் தான் பேசவேண்டும்என்னும் மன நிலைக்கும் உள்ளாகிவிடுகின்றார்கள். சிலர் தனது நண்பனோ அல்லது நண்பியோ காதல், திரு மணம் போன்ற வற்றில் ஈடுபடு வதைக்கூட விரும்புவ தில்லை. இது அவர்கள் கொண் டுள்ள ஒரு வகை மனநிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.அண்மையின் இரண்டு பெண்கள் ஓர் வைத்தியரிடம் சென்று நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறோம். எம்மால் பிரிந்து வாழமுடியவில்லை. எனவே, எம்மில் ஒருவர் ஆணாக மாற சிகிச்சை செய்ய வேண்டும்" என்று கூறிய சந்தர்ப்பங் களும் உண்டு. இதுவும் நட்பால்தான் இதில் நாம் ஆறுதல் படக்கூடியது என்னவெனில், இச் சம்பவம் நடந்தது எமது நாட்டில் அல்ல. பெரும்பாலும் இவ்வாறான சம்பவங்கள் வெளிநாடு களிலேயே நடக்கின்றன. இதற்கு பெற்றோரும் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும். ஏனெனில், அவர்களின் பாசமும் அன்பும் முழுமையாக இணைந்திருந்தால் இவர்கள் இப்படி நடந்திருக்கமாட்டார்கள். நமது அயல்நாடான இந்தியாவிலும் இப்படியான சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றமை இங்கு குறிப் பிடத்தக்கது. இது மட்டுமன்றி சில நண்பர்கள் தம்மிடையே ஓரினச் சேர்க் கையில் ஈடுபடுவதையும் எம்மால் அறிய முடிகின்றது. இப்படியான நட்பு என்பது வரம்பு மீறிச் செல்வதால் நிகழ்கின்றது. இதை சில நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்பது வேறுகதை. ‘நீ இல்லாமல் என்னாலும்நான் இல்லாமல் உன்னாலும் வாழ முடியாதுஎன்னும் மனநிலை நண்பர் மத்தியில் குடிகொள் வதனாலேயே ஓரினச் சேர்க்கை என்னும் விபரீதம் ஏற்படுகின்றது.சில விடயங்கள் சொல்லச் சங்கம மாக இருந்தாலும் சொல்லியே ஆக வேண்டும் என்பது தவிர்க்க முடியாது. அந்த வகையில் எம் நாட்டிலும் சிலர் நண்பர்கள் என்னும் வரம்பை மீறி இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவது மறைக்கமுடியாத உண்மையாகும்.நட்பா, காதலா என்றால், யாருமே நட்புதான் உயர்ந்தது என்று சொல்வார் கள். ஏன் எனில், அந்த அளவிற்கு நட்பு என்பது புனிதமானது. அதில் அன்பு இருக்கும், பரிவு இருக்கும், அக்கறை இருக்கும், உரிமை இருக்கும், ஏன் தாய்மைகூட இருக்கும். இத்தகைய புனிதம் வாய்ந்த நட்பை அதன் தன்மையையும் மேன்மையையும் கெடாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடைமையாகும்.முன்பெல்லாம் நட்பு என்றால் அதற்குள் காதல் என்பது தான் வந்து களங்கத்தை ஏற்படுத்தும் அதாவது சிலர் நட்பு என்று கூறிக்கொண்டு காதலில் ஈடுபடுவதால் யாருமே ஆண் பெண் நட்பை நம்புவதில்லை. சில சந்தர்ப்பங்களில் ஆண்- பெண் நட்பு காதலாக மாறுவதும் உண்டு. இதுகூட பரவாயில்லை. ஆனால், இப்போது இரு ஆண்கள் அல்லது இரு பெண்கள் கூட நட்பு வைத்துக்கொள்ள முடியாத நிலைக்கு சிலர் நட்பை நாசப்படுத்தி யுள்ளமை கவலைக்குரிய ஒன்றாகும். இரண்டு பெண்கள் அல்லது இரு ஆண்கள் நெருங்கிப்பழகினால் தப்பாகப் பேசுபவர்களும் உள்ளார்கள். இது அவர்களின் தவறில்லை. சிலர் நட்பு என்று கூறிக்கொண்டு எல்லைமீறி நடந்துகொள்வதுதான் அதற்குக் காரணம். எனவே, நட்பு என்பது எப்போதும் ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். அது வரம்பை மீறக்கூடாது. *
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger