உண்மைச் சம்பவத்தைச் சொல்லி வெற்றியீட்டிய – ‘‘சென்னையில் ஒரு நாள்”

தமிழ் நாட்டில் ஹிதேந்திரன் எனும் சிறுவனின் உடலுறுப்புகளை ஒரு  வைத்திய சாலையிலிருந்து  இன்னொரு  வைத்தியசாலைக்க  துரித கதியில் யாரும் யோசிக்காத நேரத்தில் ஒர் பொலிஸ்வேனில் கொண்டு வந்தார்கள்.  உயிருக்கு போராடிய இன்னொரு  உடலில் மாற்று இருதயம் பொறுத்தி உடல் உறுப்பு தானத்தை இன்று பாமரரும் யோசிக்கும் படியாய் செய்த ஒர் விஷயத்தை, மலையாள திரையுலகத்தினர் சில வருடங்களுக்கு முன் அதை அடிப்படையாய் வைத்து ஒர் அழகான, படத்தை எடுத்தனர். அதை தமிழில் எடுப்பதற்காக ராடன் டிவி நிறுவனம் வாங்கி இங்கே தயாரித்திருக்கிறது.
படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் கதைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். இது படத்துக்கு மிகப் பெரிய பலம்.  இலஞ்சம் வாங்கியதன் காரணமாய்  பதவி இடை நிறத்தம் செய்யப்பட்டு, மிகுந்த பிரயத்தனப்பட்டு அரசியல்வாதியின் தயவினால் மீண்டும் வேலைக்கு சேரும் ட்ராபிக் கான்ஸ்டபிள் சேரன், உடல் நலமில்லாத பெண்ணின் தகப்பனாய் தன்னை உணராமல், எப்போதும் சூப்பர் ஸ்டாராகவே தன்னை நினைத்துக் கொண்டு வளைய வரும் நடிகராய் பிரகாஷ்ராஜ், ராதிகா தம்பதியினர்.

பெற்ற மகனின் உறுப்புகளை தானம் கொடுத்துவிட்டு கதறும் டாக்டர் தம்பதியினராய்  ஜெயபிரகாஷ், லஷ்மி ராமகிருஷ்ணன். இக்கதைக்கு காரணமான கார்த்திக், அவனது நண்பன், காதலி. மனைவி தன் உயிர் நண்பனுடன் தனக்கு துரோகம் செய்துவிட்டதை சகிக்காமல் அவளை கார் ஏற்றி கொல்ல நினைத்து குற்றுயிரும் கொலையிருமாய் போட்டுவிட்டு, கார்த்திக்கின் இதயத்தோடு, சென்னை டூ வேலூர் 170 கிலோமீட்டர் ஒன்னரை மணி நேரத்தில் பிரயாணிக்க வேண்டிய கட்டாயத்தில் பயணப்படும் பிரசன்னா, இனியா.  
இந்த பயணத்தை எந்த விதமான தடையும் இல்லாமல் வெற்றிகரமாய் முடிக்க பிரம்மப் பிரயத்தனப்படும் சிட்டி கமிஷனர் சரத்குமார் என இந்த பயணத்தை இச்சிறு சிறு கேரக்டர்கள் மூலம்  சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி ஜெயித்திருக்கிறார்கள்.

சரத்குமாரின் போலீஸ் நடிப்பு வழக்கம் போல,மிகச் சரியாய் பொருந்துகிறார். இலஞ்சம் வாங்கி அவமானப்பட்டு மீண்டும் வேலைக்கு சேர்ந்த நேரத்தில் தானே வலிய வந்து தன் மேலிருக்கும் கறையை நீக்க இந்தத் பயணத்தை மேற்க் கொள்ளும் கேரக்டரில் சேரன். பிரசன்னாவை பொட்டல் காட்டில் விட்டுவிட்டு திரும்பும் காட்சியில் அதீத உருகலை தவிர்த்துவிட்டு பார்த்தால் நல்ல நடிப்பு.  டாக்டராக வரும் பிரசன்னா, இனியா தம்பதியினர். இனியாவின் துரோகம். பிரசன்னாவின் குற்ற உணர்ச்சி, அதனால்  பயணத்தில் ஏற்படும் குழப்பங்கள் என்று பிரசன்னாவும்  மிண்டும் ஒரு ரவுண் வருவதற்காக அசத்தியிருக்கிறார்.   சூப்பர் ஸ்டார் நிலையிலேயே இருக்கும் பிரகாஷ்ராஜ் கேரக்டரில் ப்ரகாஷ்ராஜ் ஒரிஜினலாய் இருந்திருக்கிறார். சாவின் முனையில் நிற்கும் இடத்திலும் தன்னைப் பற்றியும், தன் புகழ் பெருமையைப் பற்றியும் மட்டுமே யோசிக்கும் கேரக்டரில் பிரகாஷும், அவரது நிஜ நிலையை ஒரு கோபமான தருணத்தில் முகத்தில் அடித்தார்ப் போல சொல்லிவிட்டு செல்லும் ராதிகாவும் க்ளாஸ்.இக்கதையில் வரும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.
ஷேனாட் ஜலாலின் ஒளிப்பதிவு நல்ல தெளிவு. கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். எடிட்டிங் மகேஷ். நான் லீனியராய் சொல்லப்படும் திரைக்கதையை தெளிவாக நமக்கு கன்வே செய்திருக்கிறார். ஆக்சிடெண்ட் காட்சியில் இவரது நறுக் சிறப். மேஜோ ஜோசப்பின் இசையில் ஒரிரண்டு பாடல்கள் வருகிறது. பெரிதாய் சொல்ல ஏதுமில்லாவிட்டாலும், பின்னணியிசையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறார். முக்கியமாய் கார்திக்கின் இறப்பிற்கு பின் வரும் காட்சிகளில். அஜயன் பாலாவின் வசனத்தில் ப்ரகாஷ்ராஜிடம் ராதிகா, என்ன தான் சூப்பர் ஸ்டாராக நீங்க ஜெயிச்சிருக்கலாம் ஆனா மனுஷனா நீங்க தோத்துட்டீங்கன்னு சொல்லும் இடத்தில் பளிச்.

பாபி- சஞ்ஜெய்யின் கதை திரைக்கதையில், ஷாஹித் காதர் இயக்கியிருக்கிறார்.  மேலும் அந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் இயல்பு இதில் மிகக் குறைவாக இருப்பதாய் படும். அது உண்மையே. சேரன் நடிக்கும் கேரக்டரில் மலையாளத்தில் சீனிவாசன் நடித்திருப்பார். தவறிழைத்துவிட்டு தன்னை நிருபிப்பதற்காக போராடும் டிரைவர் கேரக்டரில் அவரை பார்க்கும் போது நமக்கும் லேசாய் ஒர் பயப்பந்து வயிற்றில் வரும். இதில் சேரனின் நடிப்பில் அது மிஸ்சிங். குறிப்பாய் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் காமியோ கேரக்டரில் வரும் ஒர் பெரிய நடிகரின் புகழை வைத்து நடத்தப்படும் பரபர காட்சியை தவிர பெரிய மாற்றமில்லாத திரைக்கதை.  

மலையாளத்தில் இருந்ததைப் போல அதே சினிமாட்டிக் க்ளைமாக்ஸ் பரபரப்பை அட்லீஸ்ட் தமிழிலாவது தவிர்த்திருக்கலாம் என்று யோசித்தாலும் வெகுஜனங்களை இம்மாதிரியான நல்ல படங்கள் சென்றடையை கொஞ்சம் காம்பரமைஸ் செய்து கொள்வதில் தப்பில்லை என்றே சொல்ல வேண்டும். என்ன குறையென்று சொல்லப் போனால் 120-130 கிலோ மீட்டர் ஓடும் வண்டியில் செல் போனில் கம்யூனிக்கேட் செய்வதை, ஒயர்லெஸ் கம்யூனிகேஷனை பக்கத்திலிருக்கும்  கார்த்திக்கின் நண்பன் மூலமாய் செய்திருக்கலாம். போன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவது தவறல்லவா?. ஒரு செய்தியை தான் படமாக்கியிருக்கும் போது மீண்டும் அதையே கருத்தாய் சொல்வது ஒரு விதமான டாக்குமெண்டரி தனத்தை தரும். அதை தவிர்த்திருக்கலாம்.
 
இந்த குறைகள் இருந்தும் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த திரைப்படம் அமைந்திரப்பத பாராட்டத்தக்க விடயம். இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களும் ஏற்றுக் கொண்டதால் வசூலிலும் படம் பருவாயில்லை ரகத்தில் போய்க்கொண்டிரக்கிறது. சிறந்த திரைக்கதை. பிரசன்னா உள்ளிட்ட நடிகர் பட்டாளத்தின் இயல்பான நடிப்பு இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு அடிகோலியுள்ளது.

கர்ப்பிணியான நயன்தாரா


ஹிந்தியில் வெற்றிகரமாக ஓடிய படம் கஹானி’. இதில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா வந்து காணாமல் போன தனது கணவனை தேடுபவராக நடித்தார்.

இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் வேடத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கிறார்.

நயன்தாரா கேரக்டருக்கு அனாமிகா என பெயரிடப்பட்டு உள்ளது. சேகர் கம்முலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது.

இதில் நடிப்பதற்காக நயன்தாரா ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளார். வயிற்றை தள்ளிக்கொண்டு கர்ப்பிணியாக நடிப்பது எப்படி என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் நடிப்பதற்காக நிறைய நாட்கள் கால்ஷிட்டை நயன்தாரா ஒதுக்கி கொடுத்துள்ளார். ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger