Home » » விண்ணில் கலந்த இசை...

விண்ணில் கலந்த இசை...



டி.எம்.எஸ். என்பதில் உள்ளடிஎன்பது அவரின் குடும்பப் பெயர்தொகுளுவா’, ‘எம்என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: ‘எஸ்என்றால், சௌந்தரராஜன். தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.

அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்கள் என்றால் டி.எம்.எஸ் இல்லாத பாட்டுக்களே இல்லை எனலாம். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ்.. சொல்லப்போனால், இருவருக்கும் பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்! ‘நவராத்திரிபடத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

பாகப் பிரிவினைபடத்தின் 100வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில்கடவுள் வாழ்த்துபாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!

பட்டினத்தார், ‘அருணகிரிநாதர்என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்! ‘நீராரும் கடலுடுத்த..’ தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜன கண மனஎன்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்.ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது! .ஆர்.ரஹ்மான் இசையில் கலைஞர் எழுதிய செம்மொழி பாடலையும் மற்ற பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார்.தனது கம்பீரக்குரலால் இசை ரசிகர்களை கட்டிப்போட வைக்கும் வசியக்குரலுக்கு சொந்தக்காரரான டி.எம்.சௌந்தர்ராஜன் (1922 - 2013) இன்று நம்மிடையே இல்லை என்பது மறக்க முடியாத சோகம்! மண்ணுலகம் கேட்டு ரசித்த அந்த இசை கானத்தை இனி, விண்ணுலகமும் கேட்கட்டும்!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger