Home » » பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர் - மன்னார் ஆயர்

பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர் - மன்னார் ஆயர்


பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவும் முளைத்துள்ள பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்  தெரிவித்துள்ளார்.

முகவரி எதுவும் இல்லாத பொதுபலசேனா என்னைப் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளது. பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். நான் அவருக்கு ஒப்பானவர் அல்லர். நான் சமயவாதி, அரசியல்வாதி அல்லது ஆயுதப் போராளி அல்ல. சமாதானத்தை விரும்புபவன்.
ஒருபோதும் நான் தனி ஈழத்தைக் கோரவில்லை. தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நிலையில், இனவாத அமைப்பான பொதுபலசேனா என் மீது வீண் பழி சுமத்துகின்றது.
 பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு முளைத்துள்ளது.இந்த அமைப்பு ஊடகங்கள் மூலமாகத் தனக்கு முகவரி தேட முற்படுகின்றது.

எனவே, இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். இந்த நாடு பல்லின மக்களைக் கொண்டது, கலாசாரத்தைக் கொண்டது. எனவே, முதலில் நாட்டின் வரலாற்றைப் படித்துவிட்டு பொதுபலசேனா அரசியலில் இறங்கவேண்டும். நாட்டின் அரசமைப்பை இல்லாதொழிக்குமாறு கூறுவதற்கு பொதுபலசேனா என்ற இந்த அமைப்புக்கு எந்த அருகதையும் கிடையாது.
எனவே, இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்க வேண்டும். அதேவேளை, தமிழர்கள் பரந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger