Home » » ‘‘விந்து தானம்” பற்றிய ஒரு சிறப்பான திரைப்படம்

‘‘விந்து தானம்” பற்றிய ஒரு சிறப்பான திரைப்படம்


‘‘விக்கி டொனர்” - விந்து தானம் பற்றிய (ஹிந்தி) படம்.
(பலநாட்களாக நினைத்து சமீபத்தில் பார்த்த படம் இது)

விந்து தானம் பற்றிய படம் என்றவுடன் இதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்து வந்தது.

படத்தோட  கரு வித்தியாசமாக இருந்தாலும். முகசுளிக்கும் வகையில் இல்லாமல் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்  வகையில் நகைச்சுலவ கலந்து படத்தை இயக்கியிலுக்கிறார்கள்.

இதுதான் படத்தின் கதை-

டில்லியில் ‘‘குழந்தைப்பேறு இல்லாதோருக்கு தரமான விந்து தருவித்து கரு உருவாக்கம் செய்வோம்” எனும் தாரக மந்திரசொல்லுடன் விந்து வங்கியுடன் கூடிய மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் ஒருவர். தரமான விந்தணு வேண்டி மருத்துவரை சந்திக்க வரும் தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு தனக்கு பிறக்கும் குழந்தை ஐஸ்வர்யா ராயாகவும்,சாருக்கான் போன்றும், சச்சின் டெண்டுல்கர் போன்றும் தகுதி படைத்தவர்களாக இருக்கவேண்டுமென்பது.


மருத்துவரும் இந்த சகல திறைமைகளும், அழகும் கூடிய ஓர் இளைஞனை வெகுநாளாக தேடிவர எதேச்சையாக ஹீரோ விக்கி (Ayushmann Khurrana) ( இவருக்கு இது முதல் படம். ஏற்கவே ஹிந்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளர்) அவர் கண்ணில் சிக்குகிறார். அவரை வெகுநாட்களாக பின்தொடரும் மருத்துவர் ஒருக்கட்டதில் தான் பின்தொடரும் நோக்கத்தை சொல்லி விந்து தானம் செய்ய சொல்லி நாயகனை வற்ப்புறுத்த முதலில் தயங்கும் நாயகன் (அப்பா இல்லாமல் விதவை தாயுடன் வளரும் மகன்) குடும்பசூழல் காரணமாக பின் சம்மதம் சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
மருத்துவர் எதிர்ப்பார்க்கும் தரமான விந்து நாயகனிடம் கிடைக்கவே மருத்துவருக்கும் வாடிக்கையாளர் பெருகுகிறார்கள்.நாயகனுக்கும் பணம் கொட்டுகிறது .நாயகனின் வாழ்க்கைதரம் உயருகிறது


இந்நிலையில் வங்கியில் பணிபுரியும் பெங்காலிப் பெண்ணான ஆஷிமா  (Ayushmann Khurrana) நாயகியை (இவர் தமிழில் கௌரவம், தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்) நாயகன் காதலிக்கிறான்.அவள் ஏற்கனவே திருமணமாகி  விவாகரத்து ஆன  பெண். இருந்தாலும் விடாமல் தான் எக்ஸ்போர்ட் ,இம்போர்ட் ,ஷேர் பிசினெஸ் செய்வதாக கூறி அவளை பல போராட்டங்களுக்கு மத்தியில் திருமணம் செய்கிறான்.


இந்நிலையில் அவள் கர்ப்பப்பை வலுவிழந்து இருப்பதாகவும் , அவளால் குழந்தை பெற இயலாது எனவும் சோதனையில் தெரியவருகிறது. இதனால் மனமுடைந்து இருக்கும் நாயகிக்கு மேலும் சோதனையாக தன கணவன் விந்து தானம் செய்பவன் என்கிற உண்மை ஒரு சம்பவத்தால்  தெரியவர மேலும் மனமுடைந்து தன்  தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.
இந்நிலையில் கதாநாயகன் வருத்தமுற்று அலைகிறான். தன்னால் அவன் குடும்பம் பாதிக்கப்பட்டு மனைவி பிரிந்ததை அறிந்த மருத்துவர் தானே ஏதேனும் செய்து அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறார்.நாயகன் நாயகி சேர்ந்தார்களா? அடுத்து என்ன நடந்தது என்பதுதான்  படத்தின் முடிவு.

மிகவும் வித்தியாசமான களத்தை எடுத்துக்கொண்டு விரசம், ஆபாசம் இல்லாமல் நகச்சுவையுடன் கதையை நகர்த்தி  இருப்பது இயக்குனரின் வெற்றி..
அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். மருத்துவர் பிச்சு உதறி இருக்கிறார்.நடிகர் ஜான் ஆப்ரகாம் தயாரித்து வெற்றி கண்டிருக்கிறார்.இப்போது இந்த படத்தின் தமிழ் ,தெலுங்கு உரிமையை நம்ம நடிகர் சித்தார்த் வாங்கி இருப்பது கூடுதல் செய்தி. விரைவில் இந்தப்படத்தை தமிழிலும்  எதிர்ப்பார்க்கலாம்..

Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger