நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிப்பதாக கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க உறுத்தியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவிற்கும் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் துணை செயலாளர் ரம்ஸின் கருத்து தெரிவிக்கையில்,
"விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிப்பதாக கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க உறுத்தியளித்துள்ளார். இந்த திரைப்படத்தினை தடை செய்வதற்கு கோரும் சுமார் 50 காரணங்கள் உள்ளடங்கிய மகஜரொன்றும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த காரணங்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தரையாடிய பின்னர் இறுதி தீர்மானமொன்று வருவதாக தெரிவித்தார்.
இதேவேளை, ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் தணிக்கை சபையின் தலைவர் காமினி சமரசேகர ஆகியோரை சந்தித்தும் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்தோம். இதற்கு சாதகமாக பதில்களையே அவர்கள் வழங்கினர்" என்றார்.
0 comments:
கருத்துரையிடுக