நள்ளிரவில் வீடுபுகுந்து கொள்ளையர்கள் வெறியாட்டம்
ஆஸ்திரேலியாவில் இலங்கை அகதிகள் மீது கொள்ளையர்கள் நடத்திய கண்முடித்தனமான தாக்குதலில் நான்கு அகதிகள் கத்திவெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தனர். மேலும், அகதிகள் பலர் தாக்குதலுக்கு இலக்காகினர்.
படுகாயமடைந்த அகதிகள் நால்வரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸி., மெல்போர்ன் அல்பியன்ஸ் பகுதியில் ,d;W சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் குறித்த இலங்கை அகதிகளின வீட்டிற்குள் கத்தி, இரும்புக்கம்பி பொல்லுகளுடன் புகுந்த கொள்ளையர்கள் சுமார் 20 பேர், அவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தினர். இதன்போது நான்கு இலங்கை அகதிகள் கத்திவெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தனர். மேலும், பலர் தாக்குதலுக்கு இலக்கினர். படுகாயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இதேவேளை, இலங்கை அகதிகளின் கைத்தொலைபேசிகள், மடிக்கணினிகள், பணம் என்பன கொள்ளையார்களால் சூறையாடப்பட்டுள்ளன.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சென்ற கையோடு, மீண்டும் மதியம் 12 மணியளவில் அங்கு வந்த கொள்ளையர்கள் பகிரங்கமான முறையில் குறித்த அகதிகள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். எனினும், அங்கிருந்த அகதிகள் அனைவரும் தப்பித்து ஓடியதால் அவர்களின் திட்டம் பலிக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்தவை வருமாறு:
நாங்கள் இருவர் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள், எம்மை இடைமறித்து நாம் வாங்கிவந்த பொருட்களை தந்துவிட்டுச் செல்லுமாறு மிரட்டினர். ஆனால், நாங்கள் அவர்களின் மிரட்டலுக்கு பணியாது வீடு சென்று விட்டோம். அதன் பின்னர் நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்குள் புகுந்த சுமார் 20 பேர் எங்களை கத்தியால் வெட்டியதுடன் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நாம் தற்போது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளோம். பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் கைது செய்யவில்லை - என்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் இலங்கை அகதிகளிடம் பணம் பொருட்களை பறிப்பதுடன் தாக்குதல்களும் அண்மைக் காலமாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக