ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி இந்திப் பதிப்பில் நடித்த இந்தி
நடிகை ஜியா கான் தற்கொலை செய்துள்ளார்.
தமிழில் வெளியாகிய கஜனி படத்தில் நயன்தாரா நடித்த பாத்திரத்தில்இந்தியில் இவர்
நடித்திருந்தார். திழில்போல் இல்லாம்ல இந்தியில் இவருக்கு அசினுக்கு இணையாக அதிக முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது. அத்துடன் அமிதாப் பச்சன் நடித்த நிஷாபத், அக் ஷய் குமாருடன் ஹவுஸ் ஃபுல் போன்ற இந்தி படங்களில் நடிகை ஜியா கான் நடித்திருந்தார்..
நஃபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் இவர் தோன்றியுள்ளார்.
மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதாக இன்று அதிகாலை தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி தற்கொலை செய்துக்கொண்டார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக தெளிவான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மும்பை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக