ஓர் மனிதனிடம் உயிரை மிஞ்சும் எதுவும் அவனிடம் இருப்பதில்லை.
அதற்கு அப்பாற்பட்டதுதான் உணர்வுகள் உணவு பணம் விருப்பு வெறுப்பு
என்பவை. உயிரைக் காப்பாற்றி அதைமட்டும் உடமையாய் எடுத்துக்கொண்டு
கால் போன போக்கில் வந்த எமக்கு வேடம் தாங்கல் பகுதியாக அமைந்தது
நலன்புரி நிலையங்கள். ஒருவித ஏக்கமும் வாழ்வில் பிடிப்பின்மையும் விரக்தியின்
எல்லையிலும் இருந்த எமக்கு நலன்புரி நிலைய வாழ்வு நல்லதா கெட்டதா என்று சிந்திக்கக்கூட மனம் எத்தனிக்கவில்லை .
எஞ்சிய எம் உறவுகளின் உயிர் காப்பாற்றப்படுமா, அவர்கள் மீண்டும் எம்மிடம் வருவார்களா எனும் எதிர்பார்ப்பு மட்டும் எம் நெஞ்செங்கும் நிறைந்திருந்தது
அங்கு நித்தம் நித்தம் செத்து மடியும் எம் உறவுகளில் நண்பர்கள் உறவுகள் உள்ளடன்குவார்களோ
எனும் அச்சம் தலைவிரித்து தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. வன்னியில் இருக்கும்
அனைவருமே எம் உறவுகள் என்னும் எண்ணம்தான் எம்முள் அதிகம் இருந்தது , ஏனெனில்
இறுதிக்கட்டத்தில் குறுகிய நிலப்பரப்பில் நாம் அனைவரும் நெருன்கிவாளும் நிலைமை
ஏற்பட்டது. வாழ்க்கையில் நாம் கஸ்ரப்படும் நேரத்தில் உண்மையான உறவுகளை
இனங்காண முடியும் அப்படியான உறவுகளை உயிருள்ளவரை நாம் மறக்கமுடியாது அது
முள்ளிவய்க்காலில் நாம் உணர்ந்த உண்மை
நலன்புரி நிலையத்தில் எம் உடல் மட்டும்தான் இருந்தது. எம்
உணர்வுகள் அந்த முள்ளிவாய்க்காலையே சுற்றிவந்தது. இதனால் நலன்புரி நிலையத்தில்
உள்ள பிரச்சனைகள் நமக்கு பெரிதாய் தெரியவில்லை, அவை ஊடகங்களிற்கு மட்டும்
தீனி போடுவதாகவே மட்டும் அமைந்தன . உயிரை மிஞ்சும் பிரச்சனை ஒன்று இவ் உலகில் உள்ளதா?
என் நலன்புரிநிலய வாழ்வில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தும் அவை என் கண்ணில் படவில்லை
நலன்புரி நிலையம் வன்னிமக்களின் வேடந்தாங்கல் பகுதியாக மட்டும்அமைந்தது.
இது எனது நலன்புரி நிலைய அதற்கு அப்பாற்பட்டதுதான் உணர்வுகள் உணவு பணம் விருப்பு வெறுப்பு

வாழ்க்கை
அனுபவம்
.......................
அனுபவம்
0 comments:
கருத்துரையிடுக