Home » » தொடரும் தற்கொலைகளால் அதிரும் மலையகம்

தொடரும் தற்கொலைகளால் அதிரும் மலையகம்


அன்றாட விற்காய் இயற்கையுடன் போராடித் தங்களது வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி பிள்ளைகளை வளர்க்கும் மலையகப் பெற்றோர்களின் மனங்கள் ன்று அதிர்ந்து போயுள்ளன. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகளே இதற்குக் காரணம். அடுத்தடுத்து மாணவர்கள் சுருக்கிட்டுக் கொள்வது, தம்மைத்தாமே தீ மூட்டிக் கொள்வது, விசமருந்திக் கொள்வது எனப் பெற்றோர் களின் தலையில் இடிவிழ வைத்துள்ளனர்.
இவர்களின் தற்கொலைக்கு எந்த ஒரு பொதுவான காரணமும் கூட இல்லை.
அண்மையில் தொடர் தற்கொலை களை தாங்கி நின்றது புசல்லாவைப் பிரதேசமாகும். இந்தப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்குள் மூன்று பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.
கடந்த 15.07 2010 ன்று புசல்லாவைப் பிரதேசத்திலுள்ள சோகம தோட்டம் சவுக்குமலை எனும் இடத்தில் தில்ருக்ஷி என்ற 16 வயது மாணவி சுருக்கிட்டு தற்கொலை செய்தார். சம்பவம் அந்தப் பிரதேசத்தினை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தில்ருக்ஷி பாடசாலைக்கு அடிக்கடி வருவதில்லை என்பதால், சம்பவம் நடந்த அன்று காலை பாடசாலைக்கு சென்ற அரை உபஅதிபர் மெடிக்கல் எடுத்து வரும்படி திருப்பி அனுப்பியுள் ளார். வீடு திரும்பிய தில்ருக்ஷி சேலை ஒன்றினால் ழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தில்ருக்ஷியின் குடும்பம் ஐந்து பேரைக் கொண்டது. வீட்டுக் கஷ்டம் காரணமாக அம்மா வெளிநாடு சென்று விட்டார். அப்பா தோட்ட வேலைக்குப் போய்விடுவார். நான்தான் தங்கைகளை பார்க்கிறனான்" என்று கதறிக் கதறி அழுகிறார் அவரது அக்கா. பாடசாலை போகாமல் விட்டால் காரணம் கேட்பது வழமை தான். அதற்காக தற்கொலை செய்வதா?" என்று புலம்புகிறார் அவரது தந்தை.
கடந்த 21.04. 2010 அன்று புசல்லாவ அட்டபாகிவே தோட்டத் தைச் சேர்ந்த வீ. சகானா எனும் மாணவி சாதாரணமாகப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டார். இவர் மலசலக் கூடக் கதவைப் பூட்டிவிட்டுத் தன்னைத் தன்னைத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்துள்ளார்.
இது மட்டுமன்றி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது தாய் அடித்தமைக்காக நஞ்சருந்தி தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள முயற்சித்துள் ளார். எனினும் உடனடி யாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தால் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இச் சம்பவம் நடந்த பின்னர் 23.07. 2010 அன்று புசல்லாவை பிளக் பொரஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சாந்தி என்ற உயர்தரம் படிக்கும் மாணவி சேலை ஒன்றி னால் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்த தினத்தன்று சாந்தி மட்டுமே வீட்டில் ருந்துள்ளார். மதியம் 2.30 மணியளவில் அவரது அக்காவின் மகன் பாடசாலை விட்டு வீடு வந்த போது சாந்தி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இவர் ஏன் தற்கொலை செய்தார் என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக புசல்லாவைப் பரதேச பொலிஸ் அதிகாரி எஸ். ராஜரட்ணம் தலைமை யிலான குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தத் தற்கொலைச் சம்பவங் களைப் பார்க்கும்போது தற்கொலை செய்தவர்கள் ஓர் குறிப்பிட்ட வயது டைய இளம் பெண்களே. இவர்கள் தற்கொலை செய்து கொண்டமைக்கு வலுவான காரணம் எதுவும் இருக்க வில்லை. வலுவான காரணம் இருந்தால் தற்கொலை செய்யலாம் என்றில்லை.
தாய் தந்தை பிள்ளைகளைக் கண்டிப்பது, ஆசிரியர் மாண வரைத் தண்டிப்பது என்பவை வழமை யானவையே. இவை புதியவை அல்ல. அப்படி இருக்கும் போது இவர்கள் ஏன் தற்கொலை செய்ய வேண்டும். இவர்களைத் தற்கொலைக்கு தூண்டிய காரணங்கள் என்ன என்ற கேள்விகள் அனைவர் மனதிலும் எழுந்துள்ளன.
இந்தத் தற்கொலைகள் தொடர்பாக வைத்தியர் அருள் ராமலிங்கம் இப்படிக் கூறினார், பொதுவாக தற்கொலை முயற்சிக்குத் தூண்டப் படுவது என்பது தோல்வி, அவமானம், ஆத்திரம், தன்னம்பிக்கை இன்மை போன்ற காரணங்களாலேயே ஆகும். அதுவும் கட்டிளமைப் பருவத்திலுள்ள பிள்ளைகள் இவற்றைச் சகித்துக் கொள்வதில்லை. தாம் நினைப்பது நடக்கவேண்டும்; தாம் யார் முன்பும் தாழ்ந்து போகக் கூடாது என்பதில் இவர்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்பார் கள். இதிலிருந்து விலகவோ தோற்க வோ நேர்ந்தால்அவர்கள் விபரீதமான முடிவுகளை எடுக்க முனைவார்கள் எனவே பெற்றோர் தான் அவர்களின் விடயத்தில் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும். அவர்களி டம் தாழ்வு மனப்பாங்கு ஏற்படாது நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.
மலையகத்தில் பொருளாதாரப் பிரச்சினை மிக முக்கிய பங்கு வகிக்கி றது. இதன் காரணமாகப் பெற்றோர்க ளும் ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் போன்ற விடயங்க ளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்களா கக் காணப்படுகின்றனர். கடும் கஷ்டத்தின் மத்தியில் தாம் படிக்க வைக்கும் தமது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள் (அதில் வெற்றியும் கண்டுள்ளனர்) அதன் காரணமாக அவர்கள் சில விடங்களில் பிள்ளைகளிடம் கண்டிப் பாக உள்ளனர். இதன் விளைவாகக் கூட இந்தத் தற்கொலை கள் இருக்கலாம். அதாவது சில மாண வர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பினை தம்மால் நிறைவேற்ற முடியவில் லையே என்றும் இவ்வாறான விபரீத முடிவை எடுத்திருக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார்.
இந்தத் தற்கொலைகள் குறித்து உளநல ஆலோசகர் .எச்.. ஹுஸை ன் கூறும்போது, மலையகத்தில் பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் கல்வி தொடர்பான விழிப்புணர்வு முழுமையாகக் காணப்படுவதில்லை. இதன் விளைவாகவே இது போன்ற தற்கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமட்டுமன்றி மலையகப் பாடசாலைகளில் உள்ள அதிபர், ஆசிரியர்கள் பெரும்பாலும் மலையகம் அல்லாத வெளி மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள். இது கூட இவ்வாறான சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக இருக்கலாம். அதாவது மலையகம் அல்லாத வெளி இடத்தைச் சேர்ந்தவர்களால் மலையக மாணவர் களின் பிரச்சினைகளையும், மனநிலைகளையும் என்பவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே மலையக மாணவர், பெற்றோர் மத்தியில் கல்வி தொடர்பாகவும், உயவியல் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இவ்வாறான தற்கொலைக ளைத் தடுக்க முடியும்" என அவர் கூறினார்.
மலையகத்தை உலுக்கிய இந்தத் தற்கொலைகள் தொடர்பாக பலர் பலவாறாகக் கூறுகின்றனர். பெற்றோர் பாடசாலைச் சமூகம் மீது குற்றம் கூறுகின்றார்கள். சிலர் பெற்றோர் மீது குற்றம் கூறிவருகின்றனர்.
மாணவர்கள் தற்கொலை செய்வது என்பது தமிழ்ச் சமூகத்திற்கு பின்னடைவையே ஏற்படுத்தும். எம் எதிர்காலச் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் மனநிலையைப் புரிந்து நடக்க பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அதேநேரம் மாணவர்களையும் சுய ஆளுமைமிக்கவர்களாக உருவாக்க வேண்டும்.
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger