Home » » யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டன

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டன


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குஇ வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலுள்ள சுமார் 6ஆயிரத்து 381ஏக்கர் (38.97பேர்ச் அளவு) பரப்பளவைக்கொண்ட பொதுமக்களின் காணிகள் காணிஇ காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட செயலகத்தினால் கையகப்படுத்தும் வேலைகள் நேற்றுக்காலை ஆரம்பிக்கப்பட்டது.

நேற்றுக்காலை வலி.வடக்குப் பிரதேச செயலர் தலையில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பிரதேசங்களின் கிராம அலுவலர்கள் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் உள்ளடங்கலான குழுவினர் இராணுவத்தினரால் இப்பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது காணி காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட செயலகத்தினால் இராணுவத்தினரின் தேவைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ள காணிகளை அடையாளப்படுத்திக் காட்டினர். இதன்பிரகாரம் குறித்த அறிவுறுத்தலின் பிரசுங்கள் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலர்களின் கண்காணிப்பில் கிராமசேவகர்கள்இ மற்றும் பட்டதாரி பயிலுனர்களை கொண்டு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளில் ஒட்டப்பட்டன.

இராணுவ பட்டாளியன்களின் தலைமையகம் அமைப்பதற்கென காணிகள் சுவீகரிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் பிரசுரங்கள் சுவீகரிக்கப்படவுள்ள காணிகள் மற்றும் பொது இடங்களில் நேற்று காலை ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த அறிவுறுத்தல் பிரசுரம் யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு  அதிகாரி . சிவசுவாமியினால் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் காணி சுவீகரிப்பிற்கான காரணம் மற்றும்இ சுவீகரிக்கப்படவுள்ள காணிகளின் அளவு பற்றிய விபரங்கள் மற்றும் அவை அமைந்துள்ள கிராமசேவகர் பிரிவு பற்றிய விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் இக்காணிகளுக்கு உரிமைகோரப்படுபவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் இனங்காணப்படவில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அதனுடன் யாழ்.மாவட்ட நில அளவை அதிகாரி அல்லது அவரது எழுத்து மூலமான ஆஞ்ஞைகளின் அறிக்கைகளின் பிரகாரம் கடமையாற்றுபவருக்குத் தேவையான ஆட்கள்இ தளபாடங்கள்இ உபகரணங்கள்இ வண்டிகள்இ மிருகங்களுடன் சுவீகரிக்கப்படவுள்ள எக்காணிக்குள்ளாவது. பிரவேசித்துஇ காணியை அளக்கவும் மண்ணை தோண்டவும் அதன் எல்லைகளை வகுக்கவும் அதில் செய்ய திட்டமிட்ட கருமத்திற்கு உத்தேசித்த வரிசையை வகுக்கவும் அந்நிலமட்டத்தையும் எல்லைகளையும் வரிசையையும் அடையாளங்களிடுவது மூலமும் அகழிகள் வெட்டுவது மூலமும் வகுக்கவும் வேறு விதமாக அளப்பை பூர்த்தியாக்கவோ அல்லது அந்நிலமட்டத்தை எடுக்கவோ அல்லது எல்லைககளை அல்லது வரிசையை வகுக்கவோ முடியாவிடின்இ அக்காணியிலுள்ளதாயினும் பயிர்இ வேலி அல்லது காட்டின் எப்பாகத்தையாவது வெட்டி வெளிப்படுத்தவும் அவ்விடயப்பரப்பிற்கு அவசியமாகவுள்ள பொதுத்தேவைக்கு அக்காணி உகந்ததா என நிச்சயிப்பதற்காக வேண்டிய மற்றைய செயல்களைச் செய்யவும் காணி சுவீகரிப்பு அலுவலக அதிகாரி அதிகாரமளித்துள்ளார்.
பிரசுரங்கள் அனைத்தும் கவறிடப்பட்டு கிராமசேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன்இ ஒட்டப்படும் இடங்களில் வைத்தே கவர்கள் பிரித்து எடுக்கப்பட்டன.

மேலும் இந்த பிரசுரங்கள் ஒட்டப்படுவதை முன்னிட்டு புல னாய்வாளர்கள் குவிக்கப்பட்டு அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் முதற்கொண்டு அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger