மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு
பிரதம நீதியரசர் சிரானி பண்டரநாயக்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான ஸ்ரீஸ்கந்தராஜா, அனில் குணரத்ன, டபிள்யு.சலாம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எந்தவிதமான சட்ட அதிகாரங்களும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 107 (1) நிலையியற் கட்டளை 78(ஏ) என்பவற்றால் அமைக்கப்பட்டது நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒரு நீதிபதியை குற்றவாளி என தீர்மானிக்கும் சட்ட அதிகாரம் இல்லை என்ற உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, உயர் நீதிமன்ற தீர்ப்பால் மூலம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை இரத்து செய்யமுடியும். இதன் அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக