நாகர்கோவில் , கட்டைக்காடு, தாளையடி, வெற்றிலைக்கேணி , உடுத்துறை ,ஆழியவளை மக்கள் கவலை
Add caption |
வடபகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுவரும் அதேவேளை, மீள்குடியமர்ந்த மக்கள் தமக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென புகார் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் கொட்டகைகளிலும் வசதியற்ற சிறு குடிசைகளி லுமே வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வடமராட்சி கிழக்குப் பகுதியில் அண்மையில் மீளக் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் சிறு கொட்டகைகளிலும் வசதிகளற்ற குடிசைகளிலும் வாழ்ந்து வருவதாகவும் இதனால் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை
மேம்படுத்த முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அவ்வப்போது தம்மை பார்வையிட வரும் அதிகாரிகள் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவிக்கின்றபோதிலும் அவை நிறைவேற்றப்படுவதில்லை எனவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.
யுத்த சூழ்நிலையின் போது எவ்வாறு தமது வாழ்க்கை அமைந்திருந்ததோ அதேபோன்று தற்போதும் இருப்பதாக கூறும் மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்த காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
யுத்தத்தாலும் சுனாமி அனர்த்தத்தினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்க ப்பட்ட மக்கள் பல வருடங்களுக்குப்பின் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் சிறு சிறு கொட்டகைகள் அமைத்து தமது வாழ்வாதாரத்தை மேம் படுத்த முடியாமல் தினம் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொள்கின்றனர்.
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளான நாகர்கோவில் , கட்டைக்காடு, தாளையடி, வெற்றிலைக்கேணி , ஆழியவளை ஆகிய பிரதேச மக்கள் இவ்வாறு பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
இவர்கள் தற்போது போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், கல்விச் செயற்பாடு, மின்சாரம் இன்மை போன்ற முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இம் மக்களின் அவல நிலையைப் போக்கி உதவ முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்
0 comments:
கருத்துரையிடுக