மிச்செல் ஒபாமா ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் பலரும் எதிர்ப்பார்க்காத வகையில் இணையமூடாக வெள்ளைமாளிகையிலிருந்து நேரடியாகத் தோன்றி ' Best Picture' விருதினைஅறிவித்தார்
இதன்போது அவர் அணிந்திருந்த ஆடை சற்று கவர்ச்சிகரமாக காட்சியளித்தது. அவரது ஸ்லீவ் லெஸ் ஆடையில் நெஞ்சுப் பகுதியும் சற்று அதிகமாகவே தெரியும் வகையில் தோன்றியிருந்தார்.
இந்நிலையில் ஒஸ்கார் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள ஈரானின் பார்ஸ் செய்திச் சேவையின் இணையத்தளம் மிச்செலின் ஆடையில் சில மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.
புகைப்படம் சற்று கவர்ச்சியாக இருந்தமையினாலேயே இம்மாற்றத்தை ஈரான் தனது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றவகையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.
எனினும் ஈரானின் இந்நடவடிக்கை தொடர்பில் சற்று பரபரப்பாக பேசப்படுகின்றது. அமெரிக்க முதல் பெண்ணின் ஆடையிலேயே ஈரான் கைவைத்து விட்டதாக நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
0 comments:
கருத்துரையிடுக