யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற ஒன்றே இனி இருக்காது." இது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க அண்மையில் தெரிவித்த கருத்து. இதைக் கேட்டு சந்தோசப்படும் மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. ஏனெனில், இவர் இவ்வாறு கூறியதில் ஏதோ ஓர் உள் நோக்கம் இருக்கும் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். பல வருடங்களாக யாழ்ப்பாணத்தின் பல பகுதியை உயர்பாதுகாப்பு வலயம் என்ற முதலை விழுங்கிவைத்துள்ளது. இதை விடுவிக்க தமிழ் அரசியல்வாதிகள் முயற்சி எடுத்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. பல காரணங்களைக் காட்டி இராணு வத்தினர் அந்த இடங்களுக்கு மக்களை அனுமதிக்க மறுப்புத் தெரிவித்தனர். ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டடங்கள் உட்படப் பல முக்கிய இடங் களை இந்த உயர் பாதுகாப்பு வலயம் விழுங்கி வைத்திருக்கிறது.தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே அக திகளாக்கப்பட இதுவும் காரணமாக அமைந்தது. 500 மீற்றர் தூரத்தில் தங் கள் வீடு இருந்தாலும் கூட அங்கு செல்ல முடியாத நிலைமையில் தமிழ் மக்கள் அந்தரித்து வருகிறார்கள். சில இடங்க ளில் மக்கள் தமது சொந்த வீடுகளைச் சென்று பார்த்து விட்டு வரக்கூட அனு மதிக்கப்பட வில்லை. அண்மையில் ஐக் கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவகலா மகேஸ்வரன் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள கோயில்களை தரிசிக்க மக்களுக்கு அரசு அனுமதி வழங்கவேண்டும்" - என்று கோரிக்கை விடுத்திருந்தார். நிலைமை அந்தளவுக்கு மோசமாக உள்ளது.உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்க ளைக் குடியமர்த்த முடியாது என்று அரசு தொடர்ந்தும் கூறிவந்தது. அதை வலுப் படுத்தும் விதமாக அண்மையில் அரசின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவித் திருந்தார். நாட்டின் பாதுகாப்புத் தான் முக்கியம். அதற்கு அடுத்த படியானது தான் ஏனைய விடயங்கள். எனவே வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படமாட்டாது" - என ஆணித்தரமாகக் கூறியிருந்தார். இது இவ்வாறிருக்கும்போது யாழ். கட்ட ளைத் தளபதி மேற்கண்டவாறு கூறியிருந்தமை தமிழ் மக்கள் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.அரசு வடக்கில் 10,000 ஏக்கர் காணியை சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்வதற்காக சுவீகரித்துள்ளது" - என கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் பகிரங்கமாகக் கூறியிருந்தார். இதுவும் யாழ். மாவட்ட படைத் தளபதியின் கூற்றுப் பொருத்திப் பார்க்கப்பட வேண்டி யவைகளாகும். அரசு உயர் பாதுகாப்பு வலயம் என்ற பேரில் வடக்கில் பல இடங்களை தன்னகத்தே முடக்கிவைத்துள்ளது. அங்கு மக்களை நெருங்கவே விடுவதில்லை. அதுவும் வன் னிப் பிரதேசத்தில் தான் அது உச்ச நிலையை அடைந்துள்ளது. 30 வருடகால யுத்தத்தின் வடுக்களை முற்றுமுழுதாகத் தாங்கியுள்ள வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் இன்று உயர்பாதுகாப்பு வலயம் என்ற கவசப்போர்வைகளைத் தான் காண முடிகிறது. கிளிநொச்சி, ஸ்கந்தபுரம், மயில்வாகனபுரம், திருபையாறு, திருமுருகண்டி, கேப்பாப் புலவு போன்ற இடங்களுக்கு மகக்ள் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. மயில்வாகனபுரக் கிராம மக்கள் பிரமந்தனாறு குளத்திற்கு அண்மையில் உள்ள சதுப்பு நிலத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்க ளது சொந்த இடம் அங்கிருந்து 500 மீற்றர் தொலைவில்தான் இருக்கிறது. இருந்தும் அங்கு அவர்களால் செல்ல முடியவில்லை.இந்த இடங்கள் எல்லாம் சிங்களக் குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்படப் போகின்றன என்ற அச்சம் தொடர்ந்து மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ளது.இவ்வாறான இடங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் இருப்ப தற்கான காரணத்தை அரசிடம் தமிழ்க் கூட்டமைப்பு வினவியபோது இங்கு வீடுகளை அமைப்பதற்கு கூரைத்தகடுகள் போதுமான அளவு இல்லை"- என அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஆனால் வடக்கில் நிரந்த படைமுகாம் அமைக்கப்பட்டு படையினரின் குடும்பத்தினரும் அவர்ளுடன் வாழ வழி செய்யப்படும் என இராணுவத்தளபதி மகாநாயக்கர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.அண்மையில் கிளிநொச்சியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்த ஜனாதிபதியிடம் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பல மனுக்களை கைளித்திருந்தனர். ஆனாலும் சொந்த இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு தொடர்ந்தும் அனுமதி மறுக்கிறது இராணுவம்.அத்துடன், தீடீரென யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி அளிவித்துள்ளார். ஒரு புறத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்பதை அகற்றுவதாக் கூறிக் கொண்டு மற்றொரு புறத்தில் மக்களின் காணிகள் பெருமெடுப்பில் கையகப்ப டுத்தப்படுகிறது.யாழ்ப்பாணம் மக்கள் செறிந்து வாழும் பகுதி. இங்கு பெருமெடுப்பிலான சிங்களக் குடியேற்றத்துக்குரிய அரச காணிகளையோ தனியார் காணிகளை சுவீகரிப்பதோ இலகுவானதல்ல. எனவே தான் அங்கிருந்து படையினரின் உயர்பாதுகாப்பு வலயங்க ளை அகற்ற இப்போது அரசு முன்வருகிறது.பதிலாக வன்னியில் பெருமளவு காணிகளை சிங்களக் குடியேற்றங்களுக்காக சுவீகரிப்பது அரசுக்கு இலகுவானது.யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களில் உள்ள இராணுவத்தினர் வன்னிப் பகுதிக்கு நகர்த்தப்பட்டு பெருமெடுப்பில் நிலைநிறுத்தப்படுவர்.அதேபோன்று வன்னியில் சிங்களக் குடி யேற்றங்களை நிறுவுவதன் மூலம் வடக் கில் தமிழ் மக்களின் தொடரான பரம்பலைத் துண்டிப்பதும் அரசின் நோக்கங்களில் ஒன்று.இதன் மூலம் அரசு யாழ்ப்பாணத்தையும் வன்னியையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த முடியும்.திருகோணமலையில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை சிறுபான்மையினர் ஆக்கி தங்களுடைய அதிகாரத்தை திணிக்க முயற்சித்தமையைப்போன்று, வடக்கிலும் ஒரு நாசகார நடவடிக்கையை மேற்கொள்ள அரசு திட்டம் தீட்டியுள்ளது.
Home »
» வடக்கில் சிங்களக் குடியேற்றம் அரசின் அடுத்த திட்டம்
வடக்கில் சிங்களக் குடியேற்றம் அரசின் அடுத்த திட்டம்
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan
klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website
0 comments:
கருத்துரையிடுக